adv

Wednesday, April 6, 2011

பணம் கட்டுவதற்கு குறைந்தது 3 மணி நேரம்



நான் நேற்று மதுரை ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் பணம் கட்ட மதியம் இரண்டு மணிக்கு சென்றேன். தானியங்கி இயந்திரம் மூலம் எனக்கு அளிக்கப்பட்ட டோககன் நம்பர் 664  ஆனால் ஸ்க்ரீன் டிஷ்ப்லையில்  அழைக்கப்பட்டது    நம்பர் 303 என் கையில் இருந்த டோககன் 664.இரண்டிற்கும் இடைப்பட்ட வித்தியாசம் 300 க்கும் மேல். எனக்கு அதை பார்த்தவுடன் மலைப்பாக இருந்தது. அப்போது எனக்கு பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர் கூறினர் நான் 11 மணிக்கு  டோககன் எடுத்தேன். இன்னும் பணம் கட்டவில்லை. நான் யோசித்து பார்த்தேன் எப்படியும் பணம் கட்டுவதற்கு குறைந்தது 3 மணி நேரம் ஆகும். எனவே திரும்பி விட்டேன். ஆனால் எனக்கு அந்த வங்கியின் மீது கோபம வந்தது காரணம் அது இந்தியாவின் முதன்மையான வங்கி. ஆனால் அந்த வங்கியில் பணம் கட்டுவதற்கு 3 மணி நேரம் ஆகிறது என்றால் இத்தனை கம்ப்யூட்டர் வசதி செய்து என்ன பயன் வேதனையாக இருக்கிறது. மக்கள் இப்படி சிரமப்பட்டால் எப்படி வங்கிகள் வளர்ச்சி அடையும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் ...

No comments:

Post a Comment